அமெரிக்காவில் வாழும் 3 தமிழர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
அமெரிக்காவில் வாழும் 3 தமிழர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம், டாக்டர். ஜானகி ராமன் மற்றும் புரவலர் பால்பாண்டியன் ஆகிய மூவருக்கும் இவ் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று பேருக்கும் அமெரிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான அறிவிப்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், டல்லாஸ் நகரில் அறக்கட்டளை சார்பில் இடம்பெற்ற நிகழ்வில் அந்நாட்டின் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் மார்க் விசி மூன்று பேருக்கும் இந்த விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்.
இவ்வாறாக அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற சாதனையாளர்கள் மூவரிற்கும் தமிழ்நாடு அரசாங்கம் சார்பில் வெளிநாடு வாழ் தமிழ்நாடு நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.