அவுஸ்திரேலியா பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீர்மானம்
அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை எதிர்வரும் 2025ஆம் ஆண்டிலிருந்து கட்டுப்படுத்த போவதாக அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய ஆண்டிற்கு வெளிநாட்டு மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கையை 270,000 ஆக மட்டுப்படுத்துவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்களின் வரலாறு காணாத வருகையால், நாட்டில் வீட்டு வாடகையும் உயர்ந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், கோவிட் தொற்றுநோய்களின் போது மாணவர்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்ட போதிலும், தொற்றுநோய்க்குப் பின்னர், நாட்டின் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களின் குறிப்பிட்ட சேர்க்கை வரம்புகள் குறித்து அரசாங்கம் அறிவிக்கும் என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.