அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள்
List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறித்த விவரம்.
கனடா அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப்போர் மும்முரமாகிவருகிறது.
27.6 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான கனேடியப் பொருட்கள் மீது 50 சதவிகித சுங்க வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 15 முதல் 50 சதவிகித சுங்க வரி விதிக்க கனடா முடிவு செய்துள்ளது.
விடயம் என்னவென்றால், இந்த வரிவிதிப்பால் கனேடிய மக்களும்தான் பாதிக்கப்பட உள்ளார்கள். ஏனென்றால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அந்தப் பொருட்களை கனேடியர்கள்தான் வாங்கப்போகிறார்கள்!
கனடாவின் பதிலடி வரி விதிப்பால் அதிக அளவில் பாதிக்கப்படப்போவது உணவு மற்றும் பானங்கள்தான். உணவு தயாரிக்கத் தேவையான பொருட்கள், பால் பொருட்கள், ஆகியவை அதிகம் பாதிக்கப்பட உள்ளன.
அடுத்தபடியாக, வீட்டு உபயோகப் பொருட்களும், விவசாயத்துக்குத் தேவையான பொருட்களும் விலை உயர இருக்கின்றன.
விவசாயத்துக்குத் தேவையான பொருட்கள் விலை உயர உள்ளதால், அதுவும் உணவுப்பொருட்கள் விலையை பாதிக்கக்கூடும்.

மேலும், கடல் உணவுகள், மரச்சாமான்கள், அழகு சாதனப்பொருட்கள், ஆண்களுக்கான உடைகள், பாதுகாப்பு உடைகள் போன்றவையும் விலை அதிகரிக்கலாம்.
இதுபோக, கிரேன்கள், ஜாக் மற்றும் ஃபோர்க்லிஃப்ட், ரயில் பெட்டிகள், இயந்திரங்களில் பொருத்தப்படும் பம்புகள், மின்விசிறிகள் ஆகியவையும் விலை உயரலாம்.
இவற்றை எல்லா பொதுமக்களும் வாங்குவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அவற்றை வாங்கும் நிறுவனங்கள் அவற்றிற்கான செலவை நுகர்வோர் மீதுதான் திணிக்கும். ஆக, அதிலும் மக்கள்தான் பாதிக்கப்பட உள்ளார்கள்.
மேலும், அமெரிக்க ஸ்டீல், காப்பர் தயாரிப்புகளும் விலை அதிகமாக உள்ளன.
ட்ரம்ப் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அமெரிக்கா கனடா மீது வரிகள் விதிக்கத் துவங்கியதிலிருந்தே கனேடிய மக்கள் பலர் கனேடிய தயாரிப்புகளையே வாங்கத் துவங்கியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இந்த வரிப்போரால், அவைகளும் விலை உயர உள்ளன.
ஆனாலும், தாங்கள் கனேடியப் பொருட்களையே வாங்கப்போகிறோம் என உறுதியாகக் கூறுகிறார்களாம் 60 சதவிகித கனேடியர்கள்!