இந்தியாவிற்காக போராடும் சிறுமி! பெருமைப்படுத்திய கனடா தொலைக்காட்சி
கனடா தொலைக்காட்சி ஒன்று இந்தியாவில் வசிக்கும் 9 வயது சிறுமியை நேர்காணல் செய்து ஒளிபரப்பியுள்ளது. லிசிப்ரியா கங்குஜம் என்ற சிறுமி, இளம் பருவ நிலை ஆர்வலராம்.
இவர் இந்திய மக்களுக்காக தன் உயிரை பணயம் வைத்து பெற்றோர் தந்த பணத்துடன் இணையதளங்கள் மூலமாக மேலும் பணம் சேகரித்து கொரோனா பாதித்தவர்களுக்கு கொடுத்து வருகிறார்.
மேலும் கொரோனா பாதித்தவர்கள் பலர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதை அறிந்தவுடன் வருத்தமடைந்ததாக இச்சிறுமி தெரிவித்துள்ளார்.
அவர்களுக்காக ஆக்சிஜன் உருவாக்கும் கருவிகளை வாங்க தன் பணத்தை கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
தற்போது வரை சுமார் 100 கொரோனா நோயாளிகளுக்கு இந்த கருவிகளை கொடுத்திருப்பதாக கூறும் இச் சிறுமி செய்த செயல்கள் நெகிழச்செய்துள்ளது.