பலஸ்தீனத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பில் முழு உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும்
பலஸ்தீனத்திற்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பில் முழு உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஆபிரிக்க தலைவர்கள் ஒருமித்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
எத்தியோப்பியாவின் தலைநகர்அடிஸ் அபாவில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றிய உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் இறுதி அறிக்கையில், பலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்க வேண்டியது “நியாயமான மற்றும் சட்டபூர்வமான உரிமை” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பலஸ்தீன மக்களை கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் எந்த முயற்சியும் கடுமையாக எதிர்க்கப்படும் எனவும், காசா பகுதியில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் போது பலஸ்தீன பிரதமர் Mohammad Mustafa, மேற்கு கரை பகுதியில் நிலவும் சூழ்நிலை காசாவுடன் ஒப்பிடத்தக்கதாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
பலஸ்தீன நிலங்கள் பறிமுதல் செய்யப்படுவது, சட்டவிரோத குடியேற்றங்கள் விரிவுபடுத்தப்படுவது மற்றும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாக அவர் குற்றம்சாட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆபிரிக்க ஒன்றியத்தின் இந்த நிலைப்பாடு, சர்வதேச அளவில் பலஸ்தீனத்திற்கு அரசியல் ஆதரவை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.