டொராண்டோவில் மீண்டும் கடும் குளிர்கால புயல்
கனடாவின் டொராண்டோ நகரம் மற்றும் டொராண்டோ பெரும்பாக பகுதிகள் இன்று மேலும் ஒரு கடும் குளிர்கால புயலின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன.
இன்று இரவுக்குள் இந்த வானிலை அமைப்பு நகரத்தை விட்டு விலகும் முன், 40 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படலாம் என கனடிய சுற்றாடல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயல், கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவுக்கு வெறும் ஒரு வாரத்துக்குப் பின்னரே தாக்கம் செலுத்துகிறது.

அந்த முந்தைய பனிப்பொழிவு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதுடன், நெடுஞ்சாலைகள் அடைக்கப்பட்டன. மேலும், நூற்றுக்கணக்கான வாகன விபத்துகளும் பதிவாகியிருந்தன.
பயணம் மிக விரைவாக மோசமடையக்கூடிய சூழ்நிலையில், குறிப்பிடத்தக்க சேதம் அல்லது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கடுமையான வானிலைக்கு மட்டும் வழங்கப்படும் அரிதான ஆரஞ்சு நிற குளிர்கால புயல் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அவசியமில்லாத பயணங்களைத் தவிர்க்கவும், வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.