கனடாவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஏற்பட்ட வேலை இழப்புகள்: வெளியான தகவல்
கனடாவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 207,000 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் ஏப்ரல் மாதத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.
இதனால் தொழில்கள் முடங்கும் சூழல் ஏற்பட்டதுடன், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 207,000 வேலை இழப்புகள் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 7.5 சதவீதத்திலிருந்து ஏப்ரல் மாதத்தில் 8.1 சதவீதமாக உயர்ந்தது.
மேலும், வேலை செய்யும் நபர்கள் ஏப்ரல் மாதத்தில், அவர்களின் பணி நேரத்திற்கும் பாதி அளவுக்கே பணியாற்றியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை மட்டும் 288,000 என அல்லது 27.2 சதவீதமாக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.