பயங்கர தீ விபத்தால் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையம் இன்று நள்ளிரவு 11.59 மணிவரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு 11.23 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், முதல்கட்டமாக 10 வாகனங்களில் வருகை தந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் இருந்த 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, 200 மீட்டர் சுற்றளவுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
விபத்தின் காரணமாக புகைமூட்டம் அதிகளவில் காணப்படுவதாலும் மின் விநியோகம் தடை பட்டதாலும் லண்டன் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை முழுவதும் (நள்ளிரவு 11.59 வரை) சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், லண்டன் விமான நிலையத்துக்கு வருகை தரவிருக்கும் அனைத்து விமானங்களும் வேறு விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.