ஒன்ராறியோவில் துணீகர சம்பவம்... ரத்தவெள்ளத்தில் சரிந்த இளம் தாயார்: படுகொலை என பொலிஸ்
ஒன்ராறியோவில் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்த இளம் தாயார் தொடர்பில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் வடமேற்கு லண்டனில் தமது வாகனத்தில் காத்திருந்துள்ளார் 30 வயதான Lynda Marques.
அப்போது அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து துப்பாக்கி வெடித்ததாகவும், அதில் Lynda Marques ரத்தவெள்ளத்தில் சரிந்ததாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால் காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி Lynda Marques மரணமடைந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் லண்டன் பொலிசார், இது ஒரு திட்டமிட்ட படுகொலை என அடையாளப்படுத்தியுள்ளனர்.
செவிலியரான Lynda Marques சமீபத்தில் தான் சொந்தமாக Botox மையம் ஒன்றை துவங்கியிருந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது அந்த பூங்கா முழுவதும் சிறார்களால் நிரம்பி இருந்தது எனவும், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு மொத்த சிறார்களும் பெற்றோர்களும் நாலாபக்கமும் சிதறி ஓடியதாக Amandeep Kang தெரிவித்துள்ளார்.
அமைதியான இந்த பகுதியில் இப்படியான ஒரு சம்பவம் எதிர்பார்க்கவே இல்லை என கிரிஷ் ஷங்கர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.