லண்டன் பூங்காவில் தீயில் கருகிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு
பிரித்தானிய தலைநகர் லண்டன் பூங்காவில் தீப்பிடித்து எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
நோர்டோல்ட்டின் பெல்லூவ் பூங்காவில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை தீயணைப்புப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை 4.30 மணிக்குப் பின்னர் தீயணைப்புப் பிரிவினரால் பொலிசார் வரவழைக்கப்பட்டதாக படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தொடர்புடைய பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக 999 இலக்கத்திற்கு அழைத்து தகவல் அளித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆணின் சடலம் என குறிப்பிட்டுள்ள பொலிசார், அவரது அடையாளம் காணப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பெருநகர காவல் துறையினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.