லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் பெண்ணுக்கு இரு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்
லண்டனில் பெண் ஒருவரை இரண்டு பேர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கடந்த 21 ஆம் திகதி லண்டனில் உள்ள Lakedale Road பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த 21ஆம் திகதி லண்டனில் உள்ள Lakedale Road பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் ஆண் ஒருவர் தன்னுடைய நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அப்போது மரத்தடியில் இரண்டு ஆண்கள் 37 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தன்னுடயை நாயை விட்டு அவர்கள் இருவரை பிடிக்க உத்தரவிட்டுள்ளார். உடனே அந்த நாய் இரண்டு நபர்களில் ஒருவர் மீது பாய்ந்து கை விரலை கடித்துள்ளது. மற்றொருவர் அந்த நபரை தள்ளிவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பியுள்ளார்.
இந்த நிலையில் அந்த நபர் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸ் அந்த நபர் பிடித்து வைத்திருந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் காயப்பட்ட பெண்ணை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 13 வயது நிரம்பிய சிறுவர்கள் 37 மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தப்பி சென்ற சிறுவனின் நண்பரை பொலிஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.