லண்டன் மக்கள் கொண்டாடிய விசித்திரமான கொண்டாட்டம் ; களைகட்டிய கீழாடை இல்லாத தினம்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் குளிர்காலத்தில் பல்வேறு இடங்களிலும் குளிர் பரவி காணப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு, நோ டிரவுசர்ஸ் டே எனப்படும் கீழாடை இல்லா தினம் கொண்டாடப்பட்டது.
இதன்படி கீழாடைகளை அணியாமல் ஒரு சிலர் சட்டை மற்றும் டை அணிந்தபடியும், சிலர் குளிருக்கு ஏதுவாக கம்பளி ஆடை அணிந்தும் வந்திருந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தபடியும், சிரித்து கொண்டும் இருந்தனர்.
ஆண், பெண் பாலின வேற்றுமையின்றி அனைவரும் சகஜத்துடன் காணப்பட்டனர். இதேபோன்று வயது வித்தியாசமின்றியும் ஆண்களும், பெண்களும் மேலாடைகளை மட்டும் வகை வகையாக அணிந்தபடி, கீழே உள்ளாடை தவிர்த்து வேறெதுவும் அணியாமல் காணப்பட்டனர்.
குளிர்காலத்தில் இதுபோன்ற அரை நிர்வாண ஆடைகளை அணிந்தபடி வந்து ரெயிலில் பயணிப்பது என்பது முதன்முதலாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2002-ம் ஆண்டு தொடங்கியது. உள்ளூர் நகைச்சுவை நடிகரான சார்லி டாட் என்பவரால் இது முதன்முதலில் நடைமுறைக்கு வந்தது.
இது பார்ப்பதற்கு கேலியாகவும், நகைச்சுவையாகவும் இருக்கும் என அவர் நினைத்திருக்கிறார். அந்த தருணத்தில் நடந்த இந்த சம்பவத்தில், 7 பேர் இதேபோன்று அரை நிர்வாண கோலத்தில், அடுத்தடுத்த ரெயில் நிறுத்தங்களில் தலா ஒருவர் என்ற கணக்கில் ரெயிலில் ஏறியுள்ளனர்.
ஆனால், ஒருவரை ரெயிலில் இருந்த மற்றவர் கவனிக்காதது போன்று நடந்து கொண்டனர். அப்போது இது பரபரப்பாக பார்க்கப்பட்டது.