உலகின் முதல் மனிதச் சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சை; லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவர்கள் சாதனை
உலகின் முதல் மனிதச் சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது .
மே 4ஆம் திகதி ரோனல்ட் ரீகன் மருத்துவ நிலையத்தில் மனிதச் சிறுநீர்ப்பை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
சிறுநீர்ப்பை கோளாறு நோயாளிகளுக்கு நற்செய்தி
இந்நிலையில் கடும் சிறுநீர்ப்பை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அந்தச் சிகிச்சை ஒரு நற்செய்தியாக மாறியுள்ளது.
41 வயது ஓஸ்கார் லரென்ஸாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் சிறுநீர்ப்பையின் பெரும் பகுதியை இழந்தார் ஓஸ்கார். பிறகு புற்றுநோயால் அவருடைய இரு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டன. உறுப்பு தானம் செய்தவரிடமிருந்து அவருக்குச் சிறுநீரகங்களும் சிறுநீர்ப்பையும் கிடைத்தன.
8 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சைக்குப்பின் அவருக்கு அந்த உறுப்புகள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன. சிறுநீரகங்களும் சிறுநீர்ப்பையும் இணைக்கப்பட்டன.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவைச் சிகிச்சை முடிந்தவுடனேயே நல்ல மாற்றங்கள் தெரிந்ததாக ரீகன் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுநீரகங்களால் உடனடியாக சிறுநீரைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது, அது சீராகச் செயல்பட்டது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.