கனடாவில் வரலாறு காணாத லொத்தர் பரிசுத் தொகை!
கனடா லொட்டரி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் 'லோட்டோ மேக்ஸ்' ஜேக்பாட் பரிசுத் தொகை 90 மில்லியன் கனேடிய டாலர்களாக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு குலுக்கலில் 85 மில்லியனுக்கான பிரதானப் பரிசை யாரும் வெல்லாததால், பரிசுத் தொகையுடன் மேலும் 5 மில்லியன் டொலர் சேர்க்கப்பட்டு 90 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ஒன்டாரியோ லொட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் புதன்கிழமை அறிவித்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், லோட்டோ மேக்ஸ் தனது அதிகபட்ச ஜேக்பாட் வரம்பை 80 மில்லியன் டாலரிலிருந்து 90 மில்லியன் டாலராக உயர்த்தியது. அதற்குப் பின்னர் முதல்முறையாகத் தற்போது பிரதானப் பரிசுத் தொகை இந்த உச்சவரம்பைத் தொட்டுள்ளது.

அடுத்த குலுக்கல் வரும் அக்டோபர் 16 அன்று நடைபெறவுள்ளது. இதில் பிரதானப் பரிசான 90 மில்லியன் டொலர் தவிர, தலா 1 மில்லியன் மதிப்புள்ள 18 மேக்ஸ்மில்லியன் பரிசுகளும், தலா 100,000 டொலர் மதிப்புள்ள குறைந்தது 90 மேக்ஸ் பிளஸ் பரிசுகளும் வெல்வதற்கு வாய்ப்பாகக் காத்திருக்கின்றன.