1,454 அடி உயரத்தில் காதலை கூறிய காதலர்கள் கைது!
ரஷ்யாவைச் சேர்ந்த இவான் ஆஞ்சலா என்ற காதல் ஜோடியை மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள 1,454 அடி உயரமுள்ள உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சிக்கு, எந்தவித பாதுகாப்பு கயிறுகளும் இன்றி ஆபத்தான முறையில் ஏறியுள்ளனர்.

1,454 அடி உயரமுள்ள உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட்
இந்நிலையில்,கட்டிடத்தின் உச்சியில் உலக அமைதி மற்றும் காதலை வலியுறுத்தும் கொடியைப் பறக்கவிட்டதுடன், தொடர்ந்து, காதலர் இவான் முழங்காலிட்டு ஆஞ்சலாவிடம் தனது திருமண விருப்பத்தைக் கூறி மோதிரம் அணிவித்தார்.
இதனை கீழே இருந்து பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த நியூயோர்க் பொலிஸார் இருவரையும் பத்திரமாக மீட்டு, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்தல் மற்றும் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த குற்றங்களுக்காக கைது செய்துள்ளனர்.
அத்துடன்,நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இருவரும் முத்தமிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.