கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சவால்
கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள் பிரதானமாக போசாக்கான உணவை உட்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உணவுப் பொருட்களுக்கான விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையில், குறைந்த வருமானம் ஈட்டும் நபர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஆரோக்கியமான உணவு வகைகளை கொள்வனவு செய்வதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் நிலையான வருமானம் ஈட்டுவோர் உணவு பணவீக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Dalhousie பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
மரக்கறி வகைகள், பாலூற்பத்தி பொருட்கள் மற்றும் பேக்கரி உணவு வகைகள் அதிகளவில் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வதற்கு வருமானம் குறைந்தவர்களுக்கு போதியளவு பொருளாதார இயலுமை கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.