கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பியவர்கள்
கனடாவின் பிராம்ப்டனில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்திலிருந்து மூன்று பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் கெனெடி ரோடு மற்றும் வில்லியம்ஸ் பார்க்வே அருகே உள்ள மெர்டன் ரோடில், அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு பின்புறத்தில் இருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ, வீட்டுக்குள் பரவியதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீ பற்றியதை முதலில் கவனித்த அண்டை வீட்டில் வசிக்கும் "கைல்" என்ற நபர், வீட்டின் கதவை பலமாக அடித்து உள்ளே இருந்தவர்களை எச்சரித்துள்ளார்.
இன்னொரு பெண் கதவை தட்டினார், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எனவே, நான் பலமாக மோதினேன். அவசியமெனில் கதவை உடைக்கலாம் என நினைத்தேன், ஆனால் அவர்கள் கேட்டு வெளியே வந்தார்கள்," என கைல் தெரிவித்தார்.
மூன்று பேர் வீட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர். வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தீ விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.