அடைமழையிலும் கண்ணீரில் நனையும் மாவீரர் துயிலுமில்லங்கள் (Video)
தாய் மண்ணின் விடுதலைக்காய் போராட்டத்தில் தமது உயிரை ஈந்த வீரர்களை நினவுகூர்ந்து தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 27அன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் நினைவுகூரப்படுகிறது. அந்தவகையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் கொட்டும் மழையையும் பொருபடுத்தாது மக்கள் திரண்டுவந்து மாவீரகளுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கில் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படுகின்றனர்.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் உறவுகள் குவிந்து கண்ணீருடன் அஞ்சலி , மாவீரர்களுக்கு செலுத்திவருகின்றனர்.