பிரபல பாடகி மடோனா பாப்பாண்டவரிடம் விடுத்தள்ள கோரிக்கை
பிரபல பொப்பிசைப் பாடகி மடோனா, புனித பாப்பாண்டவர் 14ம் லியோவிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். கசாவிற்கு விஜயம் செய்யுமாறு அவர் பாப்பாண்டவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பேரவலத்தை சந்தித்து வரும் அப்பாவி குழந்தைகளுக்கு பாப்பாண்டவர் ஒளி கொடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
காலம் தாழ்த்தாது காசா பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
காசா பிரச்சினைகளில் தலையீடு
பாடகி மடோனாவின் மகன் ரோக்கோவின் 25வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக ஊடகத்தில் இந்த வேண்டுகோளை அவர் வெளியிட்டுள்ளார்.
ஒரு தாயாக, காசா குழந்தைகளின் துன்பங்களைப் பார்க்க தம்மால் தாங்க முடியவில்லை மடோனா தெரிவித்துள்ளார்.
காசாவில் பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டினாலும் பட்னியாலும் வாடுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
காசாவில் நாள்தோறும் அதிகளவான குழந்தைகள் பட்டினி காரணமாக உயிரிழக்கும் பேரவலம் இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இவ்வாறான ஓர் பின்னணியில் பிரபல பாடகி மடோனா, பாப்பாண்டவரை இந்தப் பிரச்சினைகளில் தலையீடு செய்யுமாறு சமூக ஊடகப் பதிவு மூலம் கோரியுள்ளார்.