அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் - மதுரோ
போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வெனிசுவேலா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கடந்த வாரம் வெனிசுவேலா மண்ணில் அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பாக அவர் நேரடியாக கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா விதித்து வரும் பொருளாதார தடைகள் மற்றும் இராணுவ அழுத்த நடவடிக்கைகள் மத்தியில், அமெரிக்காவை நோக்கி சமரசமான அணுகுமுறையை மதுரோ வெளிப்படுத்தினார்.

போதைப்பொருள் கடத்தல், எண்ணெய் மற்றும் குடியேற்றம் தொடர்பாக அமெரிக்கா பேச விரும்பினால், எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
இரு நாடுகளும் உண்மை தரவுகளுடன் கூடிய தீவிரமான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டிய நேரம் இது,” என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், 2024 தேர்தலில் மதுரோவின் வெற்றியை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 80க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.