அமெரிக்காவில் மாயமான கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்; வெளியான அதிர்ச்சித்தகவல்
அமெரிக்கா கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சாண்டாகிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களை காண முடியவில்லை என கூறப்படுகின்றது. கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வித்தியாசமாக அமைந்தது.
குறைவான எண்ணிக்கையிலேயே கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் தெருக்களில் மக்களை வாழ்த்தினார்கள். சில கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் இறந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பால் மால் மூடப்பட்டிருந்தமையும் மற்றொரு காரணம் ஆகும்.
அதேவேளை அமெரிக்காவில் சாண்டாஸ்களுக்கான சர்வதேச சகோதரத்துவ அமைப்பு (ஐ பி ஆர் பி எஸ்) இந்த ஆண்டில் மட்டும் 55 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்டீபன் அர்ணால்டு கூறியதாவது,
“கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பொதுவாக குண்டான மனிதர்கள்.அவர்களில் பெரும்பாலானோர் உடல் எடை அதிகரிப்பு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள். அதோடு இந்த அமைப்பை சார்ந்த சுமார் 1900 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் கொரோனாவால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகினர் என்றும் ஆரோக்கிய குறைபாடு அடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், கொரோனா காரணமாக தாத்தாக்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. வயது முதிர்வு காரணமாக சில கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழந்துள்ளனர். ‘சாண்டாஸ் கடைசி ரைடின்’ நிறுவனர் கார்லோ கிளெம் கூறுகையில்,
“எனக்கு தெரிந்த வகையில் இந்த ஆண்டில் மட்டும் 330 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழந்துள்ளதாக கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.