கனடாவின் விக்டோரியா பகுதியில் நிலநடுக்கம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
விக்டோரியாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது என்று நிலநடுக்கவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் விக்டோரியாவில் இருந்து தென் கிழக்காக 58 கிலோமீட்டர் தொலைவில், ஜுவான் டி பியூகா நீரிணையை அண்மித்த பிளின் (Blyn) எனும் சிறிய நகரத்தில் ஏற்பட்டது.
கனடாவின் நிலநடுக்க ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவலில், எந்தவிதமான சேதமும் பதிவாகவில்லை, மேலும் சேதம் ஏற்பட வாய்ப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நிலநடுக்கங்கள் குறித்து மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி, சன்ஷைன் கோஸ்ட் பகுதியில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது லோயர் மேன்லாந்து வரை பல இடங்களில் உணரப்பட்டது.
மேலும், கடந்த திங்கள்கிழமை அமெரிக்காவின் சான் ஜுவான் தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட இன்னொரு நிலநடுக்கம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வளவு நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்வதால் அச்சப்பட தேவையில்லை என நிலநடுக்கவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் பதிவாகின்றன.