மாயமான விமானத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழப்பு; வெளியானது அறிவிப்பு
மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (Saulos Chilima) பயணித்த விமானம் மாயமான நிலையில் தற்போது வர் உரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானதில் அதன் துணைத் தலைவர் சவுலோஸ் சிலிமா (Saulos Chilima) மற்றும் இராணுவ விமானத்தில் இருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக மலாவி அரசாங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக விமானம் காணாமல் போனதால் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இருப்பினும், தேடுதல் சோகமாக முடிந்தது மற்றும் விமானத்தில் இருந்த பத்து பேரும் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
தென்கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) (Saulos Chilima) மற்றும் 9 பேருடன் திங்கட்கிழமை காலை புறப்பட்ட மலாவிய பாதுகாப்பு படை விமானம், ராடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளதாகவும் மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் (Saulos Chilima) உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.