மலேசியா முருகனை கேலி செய்து நடனம்: வானொலி ஊழியர்களுக்கு நேர்ந்த கதி
மலேசியா முருகன் கோவில் உலகளாவிய ரீதியில் பிரசித்திப்பெற்றது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் கோம்பாக் மாவட்டத்தில் பிரமாண்டமான பத்துமலை குகை முருகன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் முருகனுக்கு காவடி சுமந்து நேர்த்திக்கடன் சுமப்பதை கிண்டல் செய்து நடனமாடிய வானொலி நிறுவன ஊழியர்கள் 3 பேர் மீது பொலிஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்டர்னல் விசாரணை
சகோதர மதத்தை வானொலி நிறுவன ஊழியர்கள் 3 பேரும் முருகன் பாடலை ஒலிக்கவிட்டு பக்தர்கள் காவடி சுமந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதை கிண்டல் செய்யும் வகையில் நடனமாடியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதன்படி அவர்கள் 3 பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு எதிராக இன்டர்னல் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்து கடவுள் முருகனை கிண்டல் செய்து இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக பல்வேறு இடங்களில் புகார்கள் பதிவானது. இந்த புகாரை தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் மொத்தம் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளனர்.
இதுபற்றி மலேசியா பொலிஸ் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் கூறுகையில், ‛‛விசாரணை தொடங்கியதில் இருந்தே 73 புகார்கள் பெறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் வீடியோக்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் '' என்றும் குறிப்பிட்டுள்ளார்.