மாலைதீவு ஜனாதிபதியின் உலக சாதனை
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
நேற்றைய தினம் உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு சுமார் 15 மணி நேரம் நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.
காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய இந்த ஊடகவியலாளர் சந்திப்பு கிட்டத்தட்ட 15 மணி நேரம் நடைபெற்றுள்ளது.
முன்னதாக கடந்த 2019 ஆண்டு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி 14 மணி நேர ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தார்.
இதன் மூலம், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி முன்பு வைத்திருந்த சாதனையை மாலைதீவு ஜனாதிபதி முறியடித்துள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மாலைதீவு ஜனாதிபதி, பல்வேறு ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.