கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஓருவர் பலி
ஒன்டாரியோ மாகாணத்தின் நயாகரா பிராந்தியத்தில் உள்ள சென். கத்தரின்ஸ் பகுதியில் கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கூடாத்தில்ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளெண்டேல் அவென்யூ (Glendale Avenue) அருகே வழக்கமான கண்காணிப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், மவுண்டன் லாக்ஸ் பூங்கா (Mountain Locks Park) காட்டுப்பகுதியில் தீப்பற்றி எரிவதை கவனித்துள்ளனர்.

மரங்கள் சூழ்ந்த பகுதியில் அமைந்திருந்த ஒரு கூடாரம் முழுமையாக தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
. தகவல் கிடைத்ததும் ஸ்ட். கத்தரின்ஸ் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ அணைக்கப்பட்ட பின்னர், சம்பவ இடத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தற்போது நயாகரா பிராந்திய பொலிஸின் 1ஆம் மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வருகிறது. ஒன்டாரியோ தீயணைப்பு மார்ஷல் அலுவலகத்துடன் இணைந்து விசாரணை நடைபெறுகிறது.