கனடாவில் பொலிஸ் நிலையத்திற்குள் வாகனத்தைச் செலுத்திய நபர் கைது
கனடாவின் மொண்ட்ரியல் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியான வெஸ்ட்மவுண்டில், நகர மையத்திற்கு மேற்கே, பொலிஸ் தலைமையகத்தின் முன் கதவு வழியாக வாகனம் ஒன்று உள்ளே நுழைந்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கட்டிடத்திற்குள் யாரும் காயமடையவில்லை என்று மொண்ட்ரியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் மற்றும் அவர் நெருக்கடியான மனநிலையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பயங்கரவாதம் ஒரு காரணியாக கருதப்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் குறித்த நபர் வேண்டுமென்றே வாகனத்தை பொலிஸ் நிலையத்தின் மீது மோதச் செய்ததாவும், முன் கதவில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
44 வயதான ஒருவர் இந்த சம்பவத்தை அடுத்து விரைவாக கைது செய்யப்பட்டார்.
இது அதிவேக மோதல் அல்ல, ஆனால் அவர் மெதுவாக நுழைவாயிலை நோக்கி சென்று, நுழைவாயிலின் இரண்டு ஜன்னல்களை உடைத்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.