பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ – ஒருவர் கைது
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பென்டிக்டன் (Penticton) பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட சந்தேகத்துக்கிடமான காட்டுத்தீ தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரிட்ஜ்டேல் மற்றும் பென்டிக்டன் அவென்யூ அருகே ஏற்பட்ட தீ சம்பவத்துக்குப் பிறகு குறுகிய நேரத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
தீ ஏற்பட்டவுடன் ஹெலிகாப்டர்கள் உதவியுடனும் உள்ளூர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடனும் வேகமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அரசாங்கம் எச்சரிக்கை
காட்டுத்தீ வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் அழித்து சமூகங்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும் மாகாண அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் தற்போது 80க்கும் மேற்பட்ட தீக்கள் எரிந்து வருகின்றன.
அதில் 19 கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படுகின்றன. பெரும்பாலான புதிய தீக்காட்சிகள் மின்னல் தாக்கத்தால் ஏற்பட்டவை என காட்டுத்தீ சேவை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை 981 காட்டுத்தீக்கள் 7.3 லட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பை எரித்துள்ளன. மக்கள் அவசர பைகள் தயார் நிலையில் வைத்திருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.