கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஓருவர் பலி!
கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள மன்க்டன் பகுதிக்கு அருகில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில், லேக்வில் பகுதியிலுள்ள ரூட் 15 பாதையில் வாகனமும் பாதசாரியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஷெடியாக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு நோக்கிய திசையில் பயணித்த வாகனம் ஒன்று பாதசாரி மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஷெடியாக் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடற்கூறு பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விபத்தில் வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. விபத்து தொடர்பான தடயங்களைச் சேகரிப்பதற்காக 'ரூட் 15' பாதை சுமார் ஆறு மணித்தியாலங்கள் வரை மூடப்பட்டு, பின்னர் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், இதில் குற்றவியல் பின்னணி எதுவும் இருப்பதாக நம்பப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.