கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஓருவர் பலி
கனடாவின் நியூ பிரவுன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள செடியேக் பகுதியில் இடம்பெற்ற இரு வாகன மோதலில் 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போலீசார் வெளியிட்ட அறிக்கையின்படி, பொலிஸ் அதிகாரி ஒருவர் Ohio Drive பகுதியில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த ஒரு லாரியை கவனித்துள்ளார்.
வாகனத்தை நிறுத்த முயன்றபோது, அது வேகத்தை அதிகரித்து Route 133 கிழக்கு திசை நோக்கி திரும்பியதாக கூறப்படுகிறது. பின்னர் அதிகாரி பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார்.

இரவு 9.56 மணியளவில் Route 133-ல் இரு வாகனங்கள் மோதியதாக தகவல் கிடைத்துள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்ட லாரி, முன்பு அதிவேகமாக சென்றதாகக் கூறப்பட்ட அதே வாகனமாகும் என போலீசார் தெரிவித்தனர்.
லாரி ஓட்டுநர் மைய கோட்டை கடந்துச் சென்றதால் எதிரே வந்த காருடன் மோதியதாக நம்பப்படுகிறது. காரை ஓட்டிச் சென்ற 45 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் வாகனத்தில் தனியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரியை ஓட்டிய 20 வயது இளைஞரும், அவரது நான்கு பயணிகளும் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
லாரி ஓட்டுநர் “மரணத்தை ஏற்படுத்திய ஆபத்தான ஓட்டம்” மற்றும் “போலீசாரிடமிருந்து தப்பிச் செல்வது” என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.