கனடாவில் தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலி
கால்கரி நகரின் வடகிழக்கு பகுதியான ஃபால்கன்ரிட்ஜில் வீடு தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்தார், ஒருவர் தீவிர நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் அதிகாலை 4:20 மணியளவில், கால்கரி நகரின் வடகிழக்கு பகுதியிலுள்ள 70 பிளாக் ஃபால்வுட் பிளேஸ் N.E. பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டில் தீ ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தியதன் பிறகு, வீட்டில் இருந்து மூன்று குடியிருப்பாளர்கள் மற்றும் இரண்டு நாய்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படகின்றது.
ஒரு ஆண் குடியிருப்பாளர் நாய்களுடன் வெளியேறியிருந்தார், ஆனால் மற்ற இருவர் (ஒரு ஆண், ஒரு பெண்) மீட்கப்பட்டனர்.
அந்த ஆண் நபர் இதயநோயால் அவதிப்பட்ட நிலையில் இருந்தார், மருத்துவ குழுவினர் அவரை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டபோதும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெண் ஒருவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.
இந்த தீ விபத்து சம்பந்தமான தகவல், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை, குறிப்பாக தீயணைப்பு படையினர் வருவதற்கு முன் எடுக்கப்பட்டவை, piofire@calgary.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.