கனடாவில் சிகிச்சைக்காக காத்திருந்த நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!
கனடாவின் மன்றியால் பகுதியில் சிகிச்சைக்காக காத்திருந்த நபர் மரணித்துள்ளார்.
சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 6 மணித்தியாலங்கள் காத்திருந்தவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். 39 வயதான அடம் போர்கோயிங் என்ற நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு இசிஜி சோதனையை நடத்தப்பட்டதன் பின்னர் நீண்ட நேரம் சிகிச்சை அளிப்பதற்கு தாமதமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
நெஞ்சு வலி காரணமாக அவர் வைத்தியசாலையின் உதவியை நாடியுள்ளார். கனடாவில் இவ்வாறு சிகிச்சைக்காக காத்திருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஆறு மணித்தியாலங்கள் காத்திருந்து உரிய சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.