கனடாவில் சோகம்: கட்டுமானப் பள்ளத்தில் விழுந்து நபர் பலி
கனடவில் சோகம்: கட்டுமானப் பள்ளத்தில் விழுந்து நபர் பலி! கனடாவின் பிராம்ப்டனில் பிற்பகல் கட்டுமானப் பள்ளம் ஒன்றில் விழுந்து நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குயின் ஸ்ட்ரீட் ஈஸ்ட்டிற்கு தெற்கே, கிளாரன்ஸ் ஸ்ட்ரீட் அருகிலுள்ள கென்னடி ரோடு சவுத் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியில் தொழில்சார் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக மாலை 4 மணிக்கு சற்று முன்பாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்புப் படையினர், பள்ளத்தில் விழுந்த நபரை மீட்க தங்களின் சிறந்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், என காவல்துறை தெரிவித்துள்ளனர்.
பீல் பிராந்திய மருத்துவ உதவி பிரிவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஒரு நபரை பரிசோதித்ததாகவும், ஆனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை எனவும் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது விபத்து நடந்த பகுதி காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஓன்றாரியோ தொழிலாளர் அமைச்சு காவல்துறையின் ஆதரவுடன் விசாரணையைத் தொடங்கியுள்ளது.