பிராம்டன் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
பிராம்டனில் வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் போது ஒருவர் உயிரிழந்ததாக பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2ம் திகதி மதியம் 1 மணியளவில், ப்ரமலியா ரோடு மற்றும் டியூசைடு டிரைவ் சந்திப்பு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருந்ததாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், 2ம் திகதி மதியம் 1 மணி முதல் 1.45 மணி வரை சனிவேல் கேட் மற்றும் ஹைவே 50 இடையே போவியார்ட் டிரைவு அல்லது காஸ்டில்மோர் சாலையில் கிழக்கே நோக்கிச் சென்ற வாகனங்களில் டாஷ்காம் உள்ளவர்கள் காவல்துறையினரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தகவலை ரகசியமாக வழங்க விருப்பமுள்ளவர்கள் ‘Crime Stoppers’ அமைப்பை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.