கனடாவை உலுக்கிய 13 வயது சிறுமியின் கொலை: குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13 வயது சிறுமியை கத்தியால் தாக்கி படுகொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், தண்டனை காலத்தின் முதல் 16 ஆண்டுகளில் குற்றவாளிக்கு பிணை வழங்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2016ல் Abbotsford பகுதியில் உள்ள பள்ளி மாணவியான 13 வயது Letisha Reimer என்பவரை Gabriel Klein என்ற இளைஞர் கத்தியால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்துள்ளார்.
சம்பவத்தின் போது உடனிருந்த Letisha Reimer-ன் நண்பரையும் அந்த இளைஞர் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் புதனன்று காலை பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்ற நீதிபதி Heather Holmes தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கொலை வழக்கு தொடர்பில் 16 ஆண்டுகள் பிணையில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனையும், மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு தனியாக 7 ஆண்டுகளும் தண்டனையாக தீர்ப்பளித்துள்ளார்.
சம்பவத்தின் போது இளைஞர் Gabriel Klein உளவியல் பாதிப்பில் இருந்ததாக முன்வைக்கப்பட்ட வாதம் நீதிபதியால் நிராகடிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாழ்நாளில் அவரால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கனடாவில் பயன்படுத்த முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.