டொரண்டோ இரவு விடுதி அருகே கத்திக்குத்து: 20 வயது இளைஞர் காயம்!
டொரண்டோவில் உள்ள இரவு விடுதி ஒன்றிற்கு அருகே 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, அடையாளம் தெரியாத நபரைத் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
லேக் ஷோர் போல்வார்ட் ஈஸ்ட் மற்றும் பார்லிமென்ட் ஸ்ட்ரீட் சந்திப்புப் பகுதியில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், கத்திக் குத்துக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரைக் கண்டறிந்தனர்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே தாக்குதலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான தகவல்கள் அல்லது விவரங்கள் ஏதேனும் தெரிந்தால், உடனடியாக டொரண்டோ காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.