டொரொண்டோவில் கத்தி குத்து இளைஞர் படுகாயம்
டொரொண்டோ நகர மத்திய பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற குத்து தாக்குதலில் 20 வயது இளைஞர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இரவு 10:50 மணியளவில் யோங் தெரு மற்றும் கிங் தெரு மேற்கு பகுதியில் இடம்பெற்றதாக டோரொண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இளைஞர் கடுமையான காயங்களுடன் உள்ளூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை (416-808-5200) தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.