பிரான்ஸில் மனைவியை கொலை செய்து விட்டு தந்தையிடம் சிகரெட் கேட்ட மகன் ; சம்பவத்தால் அதிர்ச்சி!
பிரான்ஸ் Les Lilas (Seine-Saint-Denis) நகரில் வசிக்கும் பெண் ஒருவர் அவரது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கணவரது தந்தை காவல்துறையினரையினரை அழைத்துள்ளார்.
கடந்த ( 22,) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணி அளவில் 38 வயதுடைய நபர் அவரது தந்தையை அழைத்து தமக்கு சிகரெட் ஒன்று தருமாறு கேட்டுள்ளார். அதன்போது அவர் மிகுந்த தடுமாற்றமாக இருந்ததாகவும், அவரது மனைவியை தாம் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதை அடுத்து, தந்தை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். வீட்டுக்கு விரைந்துவந்த பொலிசார் , வீட்டில் மகனின் மனைவி கத்தி மற்றும் சுத்தியலால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர்.
மனைவி இரத்த வெள்ளத்தில் அவர் இறந்துகிடந்த நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டது. அத்தோடு அவரைக் கொலை செய்த கணவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.