கனடாவில் கண்களை மூடி தெரிவு செய்த டிக்கெட்: கிடைத்த அதிர்ஷ்டம்
கனடாவின் ஒன்றாரியோவில் நபர் ஒருவர் கண்கனை மூடிக் கொண்டு தெரிவு செய்த லொத்தர் சீட்டு ஊடாக பெருந்தொகை பணம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இவ்வாறு தெரிவு செய்த இலக்கங்களின் காரணமாக குறித்த நபர் 1.2 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றெடுத்துள்ளார்.
ஒன்றாரியோவின் பீட்டர்ப்ரோவ் பகுதியைச் சேர்ந்த 53 வயதான ரொபர்ட் ஃபார் என்ற நவரே இவ்வாறு பெருந்தொகை பணத்தை வெற்றியீட்டி உள்ளார்.
இந்தப் பணத்தை முதலீடு செய்வதற்கும், உறவினர்களுக்கு உதவுவம், நன்கொடை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ச்மோங் வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் இந்த லொத்தர் சீட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
கண்களை மூடிக் கொண்டு பென்சில் ஒன்றினால் லொத்தர் சீட்டை தெரியும் பழக்கத்தை தாம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.