கனடாவில் தகாத செயலில் ஈடுபட்ட நபருக்கு ஆறு ஆண்டுகள் சிறை
கனடாவில் சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஸ்னெப்செட் வழியாக இளம் சிறுமிகளை தொந்தரவு செய்து, நிர்வாண புகைப்படங்களை பெற முயன்ற ஸ்டீவன் லாவர்ன் பிளாஸ்கெட் (Steven Laverne Plaskett) என்ற நபருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
44 வயதான பிளாஸ்கெட் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான்கு இளம் சிறுமிகளை குறிவைத்து மிரட்டல், பிளாக்மெயில் மற்றும் தொந்தரவுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

நான்கு குற்றச்சாட்டுகளில் மிரட்டல், மூன்று குற்றச்சாட்டுகளில் பிளாக்மெயில், இரண்டு குற்றச்சாட்டுகளில் மிரட்டல் விடுத்தல் ஆகியவற்றை ஒப்புக்கொண்டார்.
நீதிபதி டெரன்ஸ் ஷுல்ட்ஸ் (Justice Terence Schultes) வெளியிட்ட தீர்ப்பில், “பிளாஸ்கெட் ஈஸ்ட் கூட்டினே (East Kootenay) பகுதியில் நான்கு இளம் சிறுமிகளுடன் மின்னணு தொடர்பில் ஈடுபட்டு, அவர்களில் மூவரை நிர்வாண புகைப்படங்களை அனுப்ப வற்புறுத்த முயன்றார்.
இதனால் அனைவரும் தங்கள் பாதுகாப்புக்காக அஞ்சும் நிலை ஏற்பட்டது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆணைப்படி, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.