கனடாவில் நபர் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கனடாவில் நபர் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ஒன்றாரியோவின் கியுலிப் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பெய்ஸிலி வீதியில் சந்தேகத்திற் இடமான வாகனமொன்று தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் இருந்த நபர், பொலிஸாருடன் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமார் 44 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸார் சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதன் காரணமாக விசேட விசாரணைப் பிரிவினர் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.