மனிதன் புகைக்கும் ஒரு சிகரெட்டால் தன் வாழ்நாளில் எத்தனை நிமிடங்களை இழக்கிறான் தெரியுமா?
பிரித்தானிய அரசாங்கத்தின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத்துறை மேற்பார்வையில் லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (UCL) ஆராய்ச்சி ஒன்றை நடாத்தியுள்ளது.
குறித்த ஆராய்ச்சியில் புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக 20 நிமிடங்களை இழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு பொதியில் உள்ள 20 சிகரெட்டுகளை புகைப்பதால் கிட்டத்தட்ட வாழ்நாளில் 7 மணித்தியாலங்களை மனிதன் பறிகொடுக்கிறான் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆண்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் தங்கள் வாழ்நாளில் 17 நிமிடங்களை இழக்கிறார்கள், பெண்கள் 22 நிமிடங்களை இழக்கிறார்கள்.
மேலும், நீண்ட கால புகைப்பழக்கம் உடையவர்கள், தங்கள் வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழக்கிறார்கள்.
நீண்ட கால சிகரெட் புகைப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் வரை இறக்கின்றனர். இது, இங்கிலாந்தில் ஆண்டுக்கு 80,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது.