கனடாவில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த நபர் பொலிஸாரிடம் சிக்கினர்!
கனடாவில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்கேதத்தின் பேரில் தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகம் முழுவதிலும் பச்சை குத்திக் கொண்ட குறித்த நபரை பொலிஸார் கடந்த ஒரு மாத காலமாக தேடி வந்தனர்.
நாடு தழுவிய ரீதியிலான பிடிவிராந்து உத்தரவு குறித்த நபருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
31 வயதான மைக்கல் ஸ்டமாடாகோஸ் என்ற நபரே இவ்வாறு கைது செய்பய்பட்டுள்ளார்.
குறித்த நபர், ஹமில்டன் பகுதியில் அமைந்துள்ள புனித ஜோசப் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ள சென்றுள்ளார்.
இதன் போது பொலிஸ் விளம்பரம் மூலம் தேடப்பட்டு வரும் நபர் இவர்தான் என அடையாளம் கண்டு கொண்ட தாதியொருவர், பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
கொலை மிரட்டல்கள், தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.