புகைப்படம் வெளியிட்டு கனடா முழுவதும் தேடப்படும் நபர்
கல்கரியில் சிறுமியிடம் அத்துமீறிய நபர் தொடர்பில் புகைப்படம் வெளியிட்டு, கனடா முழுவதும் தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கல்கரி பகுதியை சேர்ந்த 32 வயது Jesse Donald Hannon என்பவரையே பொலிசார் கனடா முழுவதும் தேடி வருவதாக புதன்கிழமை அறிவித்துள்ளனர்.
குறித்த நபர் 13 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்புடைய சம்பவம் எப்போது, எங்கே நடந்தது என்பது தொடர்பில் பொலிசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மேலும் குறித்த நபர் தொடர்பில் ஏற்கனவே 6 கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் ஒன்ராறியோ பகுதியில் பதுங்கி இருக்கலாம் என நம்புவதாகவே பொலிசார் தெரிவிக்கின்றனர்.
32 வயதான Jesse Donald Hannon தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.