போலந்தில் கட்டாய இராணுவ பயிற்சி; பிரதமர் அறிவிப்பு
போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் என போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
5 இலட்சமாக அதிகரிப்பதற்காக தீர்மானம்
போர் நிலைமை ஏற்படுமாயின் ஒவ்வொரு ஆணும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ,இதன் மூலம் நாட்டு இராணுவத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளின் தற்போது 1.3 மில்லியன் இராணுவ வீரர்கள் இருப்பதாகவும், போலந்து நாட்டின் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள இரண்டு இலட்சம் வீரர்களை 5 இலட்சமாக அதிகரிப்பதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.