சைகயைினால் சர்ச்சையில் சிக்கிய மனிடோபா எதிர்க்கட்சித் தலைவர்
கனடாவின் மனிடோபா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஆபி கான் (Obby Khan), சட்டமன்ற அமர்வில் தலையில் துப்பாக்கி சுடுவது போல் சைகை செய்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த சர்ச்சை, கல்வி அமைச்சர் டிரேசி ஷ்மிட் (Tracy Schmidt) கேள்விக்கு பதில் அளிக்கும் போது ஏற்பட்டது.
அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த கான், தன் சக எம்.எல்.ஏ.விடம் திரும்பி, இரண்டு விரல்களை தன் தலையில் வைத்து, துப்பாக்கி சுடும் போல் சைகை செய்தார். இந்த காட்சி சட்டமன்ற நேரடி ஒளிபரப்பில் பதிவாகியிருந்தது.
சில விநாடிகளில் அவர் அதே சைகையை மீண்டும் செய்ததாக வீடியோவில் தெளிவாக தெரிகிறது. அதனை தொடர்ந்து ஆளும் கட்சியான என்டிபி (NDP) உறுப்பினர்கள் உடனே எதிர்ப்பு தெரிவித்தனர். கான் பின்னர் ஒரு குறுகிய மன்னிப்பு செய்தி வெளியிட்டார்.
சட்டமன்ற தலைவர் டாம் லின்ட்சே (Tom Lindsey) அவரை அறையில் கண்டித்து, மீண்டும் மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொண்டார்.
“அந்த சைகை மிகவும் ஒழுங்கற்றதும், அவமதிப்பானதுமாக இருந்தது. அது துப்பாக்கி வன்முறையையும் சுயகாயப்படுத்தும் செய்கையையும் பிரதிபலிக்கிறது,” என்று லின்ட்சே கூறினார்.
“இத்தகைய செயல்கள் தற்போது நிலவும் அரசியல் சூழலில் மிகவும் கவலைக்கிடமானவை. குறிப்பாக, அப்போது மாணவர்கள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்தனர். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,” என கல்வி அமைச்சர் ஷ்மிட் கூறியுள்ளார்.
நேற்று சட்டமன்றத்தில் எனது குழந்தைத்தனமான நடத்தை மற்றும் சைகைகளுக்காக முழுமையாக மன்னிப்பு கோருகிறேன். அது வெறும் விரக்தியிலிருந்து நடந்த தவறு. இதற்கான எந்த நியாயமும் இல்லை,” என அவர் கூறியுள்ளார்.