டாக்காவை நோக்கிய பேரணி ; வெளியேறினார் பிரதமர் ஷேக் ஹசீனா
பங்களாதேசில் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு குறித்து ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான பரந்துபட்ட போராட்டங்களாக மாறியுள்ளன.
பங்களாதேக்ஷ் பிரதமருக்கு எதிர்ப்பு வெளியிட்டு டாக்காவை நோக்கி ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பேரணி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
பங்களாதேக்ஷ் பிரதமர் ஷேக்ஹசீனா தலைநகர் டாக்காவிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளார் என அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் ஷேக்ஹசீனா மற்றும் அவரது சகோதரியும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
பங்களாதேசில் அரசாங்க எதிர்ப்பு ஆதரவாளர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற மோதல்களில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் ஒத்துழையாமை போராட்டத்தினை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.