மரியுபோலில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை வெளியேற்றும் முயற்சியில் பின்னடைவு!
உக்ரைன் மீது ரஷ்யா 38-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லையென தெரியவந்துள்ளது.
இதேவேளை, ரஷ்ய துருப்புகளின் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மரியுபோல் நகரில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை வெளியேற்றுவதற்கு அந்நகரத்திற்கு செல்லும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
மூன்று கான்வாய் வாகனங்கள் பாதுகாப்புடன் செஞ்சிலுவை சங்க குழுவினர் மரியுபோல் நகருக்கு செல்ல முடியாமல் சபோரிஜியாவுக்கு திரும்பி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தங்களது செயல்பாடுகள் வெற்ற பெற இரு தரப்பினரும் ஒப்பந்தங்களை மதித்து பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவது மிகவும் முக்கியமானது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.