கனடாவில் மசாஜ் நிபுணரின் மோசமான செயல்
கனடாவின் டொரோண்டோவில் ஒரு பெண்ணுக்கு மசாஜ் செய்த பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பதிவு செய்யப்படாத மசாஜ் நிபுணர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் டொரோண்டோ மற்றும் மார்கம் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது.
முதல் சம்பவம் ஆகஸ்ட் 12 அன்று ரோஸ்மவுண்ட் அவென்யூ மற்றும் வியா இட்டாலியா பகுதிகளுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

அப்போது பாதிக்கப்பட்ட பெண் சந்தேக நபரின் வீட்டிற்கு மசாஜ் பெறச் சென்றிருந்தார்.
மசாஜ் முடிந்த பின், சந்தேக நபர் அவரை பாலியல் ரீதியாகத் தொட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன் சில வாரங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 1 அன்று, பாதிக்கப்பட்ட பெண் மார்கம் நகரின் வுட்பைன் அவென்யூ மற்றும் ஹைவே 407 அருகிலுள்ள நீச்சல் கழகத்தில் அந்த நபரை மீண்டும் சந்தித்தார்.
அப்போது சந்தேக நபர் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் ரீதியாகத் தொட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் செப்டம்பர் 6 அன்று பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர், “சாம்” என்ற பெயரில் சந்தேக நபரை அறிந்திருந்ததாக தெரிவித்தார்.
விசாரணையின் போது, அந்த நபர் பதிவு செய்யப்பட்ட மசாஜ் நிபுணர் (RMT) அல்ல என்பதும் தெரியவந்தது.
ஒன்டாரியோ மாகாணத்தில் பதிவு செய்யப்படாத நபர்கள் “மசாஜ் தெரபிஸ்ட்” என்று தங்களை அழைப்பதற்கும், தொழில்முறை மசாஜ் சேவைகள் வழங்குவதற்கும் அனுமதி இல்லை.
டொரோண்டோவைக் சேர்ந்த 49 வயதான குவோக் வின் ட்ரான் (Quoc Vinh Tran) என்பவருக்கு இரண்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவை நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் என்பதையும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இதே நபரால் வேறும் எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் து குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.