ஒன்ராறியோ வாடகைதாரர்களுக்கு புத்தாண்டில் பேரிடியாகும் தகவல்
ஒன்ராறியோ மாகாண நிர்வாகம் வாடகை தொகை வழிகாட்டுதல்களை புதுப்பித்துள்ள நிலையில் புத்தாண்டில் வாடகைதாரர்கள் அதிக கட்டணம் செலுத்த நெரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டில் வாடகை கட்டணத்தில் 1.2% அதிகரித்துள்ளதாக மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் வாடகைதாரர்களிடம் இருந்து அதிகபட்ச தொகையை ஈடாக்கும் உரிமை உரிமையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.
மாகாண நிர்வாகத்தின் புதிய வழிகாட்டுதலானது வாடகை குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், காப்பகங்கள், மொபைல் வீடுகள் உள்ளிட்டவைகளுக்கு பொருந்தும். ஆனால், ஆட்கள் வசிக்காத குடியிருப்பு தொகுப்புகளுக்கு விலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கான கட்டண உயர்வானது 2020ம் ஆண்டைவிடவும் குறைவானதாகவே தெரியவந்துள்ளது. 2020ல் வாடகை கட்டணம் 2.2% உயர்த்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து பெருந்தொற்று பரவல் காரணமாக வாடகை கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் கடந்த நவம்பர் மாதம் சராசரியாக 2,167 டொலர் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.